திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2018ல் தமிழகத்தையே உலுக்கிய மாணவி கொலை விவகாரம்; நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு.!
சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்வினி, கடந்த 2018ம் ஆண்டு கே.கே நகர் மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து குத்திக்கொலை செய்யப்பட்டார்.
மாணவியை, அவர் வசித்து வரும் பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
காதலில் விருப்பம் இல்லாத மாணவி தனது முடிவை தெரிவித்தும் அழகேசனின் கொடுமை தொடர்ந்ததால், அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அழகேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த அழகேசன், மாணவியை கல்லூரி வாசலில் வைத்து குத்திக்கொலை செய்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அழகேசன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு, மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை அனைத்தும் நிறைவுபெற்று, அழகேசனுக்கு எதிரான குற்றசாட்டுகள் அனைத்தும் உறுதியாகவே, குற்றவாளி அழகேசனுக்கு நீதிபதிகள் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர்.