கழிவுநீர் பள்ளத்தில் விழுந்து இளைஞர் மரணம்; போதையில் தள்ளாடி சோகம்.. இழப்பீடு கேட்கும் இ.பி.எஸ்.!



chennai-kk-nagar-youth-dies-by-drainage-work-staggered

 

சென்னையில் உள்ள கே.கே. நகர், அம்பேத்கர் குறுக்குத்தெரு பகுதியில் மழைநீர் கால்வாய் கட்டுப்பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பள்ளமும் தோண்டப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கவனத்திற்காக தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அதே பகுதியில் வசித்து வரும் ஐயப்பன் (வயது 35) என்ற நபர், மதுபோதையில் தடுப்புகளை தாண்டி பள்ளத்திற்குள் தடுமாறி விழுந்தார். கழிவுநீர், மழைநீர் தேங்கியிருந்த நீருக்குள் விழுந்தவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க: காதல் கணவனுக்கு கள்ளத்தொடர்பு... விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.!!

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் நகர் காவல் துறையினர், ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.  

இதனிடையே, ஐயப்பனின் மரணத்திற்கு மாநகராட்சியின் அலட்சியப்போக்கு, மெத்தனமான பணியே காரணம் என விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளார். 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் வழங்கப்பட்ட நிலையில், குடிபோதையில் இளைஞர் உயிரிழந்ததைத்தொடர்ந்து, அவரின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுளள்து. 

இதையும் படிங்க: 16 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு... 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.!!