மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசையாக வாங்கி சாப்பிட்ட பீப் பிரியாணியில் கிடந்த பல்லி; குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.!
சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் பாலத்திற்கு அருகே, பிஸ்மி பீப் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் வசித்து வரும் ஹேம சந்திரன் என்பவர், நேற்று முன்தினம் சாப்பிடுவதற்காக 3 பீப் பிரியாணி வாங்கி இருக்கிறார்.
குடும்பமாக சேர்ந்து பிரியாணி சாப்பிட்டனர்
இதனை தனது உறவினரான பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஜெயந்தி (வயது 52) என்பவரின் வீட்டில் சாப்பிட கொடுத்துச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த ஜெயந்தி, அவரின் மகள் சரண்யா (வயது 32), ஜெயந்தியின் சகோதரி மகள் சுவாதி (வயது 25), சுவாதியின் மகன்கள் யஸ்வந்த் (வயது 6), ராஜா (வயது 4) ஆகியோர் பிரித்து சாப்பிட்டுள்ளார்.
குடும்பத்துடன் மருத்துவமனையில் அனுமதி
இதனிடையே, சுவாதி தனது பார்சலை பிரித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது, சிறிய பல்லி ஒன்று அதில் இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோனவர் செய்வதறியாது திகைக்க, பிரியாணியை சாப்பிட்ட சிறார்கள் உட்பட ஐவரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் உள்ள எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல்; உணவுப்பாதுகாப்புத்துறை அதிரடி.!
அதிகாரிகள் ஆய்வு
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இவர்களில் ஜெயந்தி, சுவாதி, சரண்யா ஆகியோர் உடல்நலம் பெற்றனர். ராஜா, யஸ்வந்த் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சீல் வைத்தனர். மேலும், ஆர்.கே நகர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட முண்டியடித்த கூட்டத்தால் பரபரப்பு; திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பகீர்.!