திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓடும் இரயில் ஜன்னலில் அட்டை போல தாவி செல்போன் பறிப்பு முயற்சி; 2 கால்களை இழந்த கொள்ளையன்..!
குறைவான வேகத்தில் பயணம் செய்யும் இரயில்களை குறிவைத்து, ஜன்னலோர பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனின் 2 கால்கள் துண்டானது.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி பயணம் செய்யும் மின்சார இரயில் தனது வழக்கமான பயன்னத்தை தொடர்ந்தது. அப்போது, வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி - கொருக்குப்பேட்டை இடையே விரைவு இரயில்கள் வருகையால் மின்சார இரயில் குறைந்த வேகத்தில் சென்றது.
அப்போது, தண்டவாளம் அருகே நின்றுகொண்டு இருந்த வாலிபர், இரயிலில் தாவி ஏறியுள்ளான். பின்னர், பயணிகளிடம் செல்போன் பறிக்க முயற்சித்த நிலையில், அவர்கள் கூச்சலிட்டதால் ஜன்னலில் தொங்கியபடி பயணித்த வாலிபன் நிலைதடுமாறி மின்சார இரயிலுக்குள் விழுந்துள்ளான்.
இதில், அவனின் 2 கால்களும் சிக்கிக்கொண்டு, இடது கால் துண்டாகிப்போனது. வலது கால் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை இரயில்வே காவல் துறையினர் இளைஞனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளைஞன் நவீன் @ அட்டை நவீன் (வயது 24) என்பது தெரியவந்தது.
இவன் ஓடும் மின்சார இரயில் ஜன்னலில் தாவி பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட முயற்சிப்பது வாடிக்கை என்பது அம்பலமானது. சம்பவத்தன்று அவன் ஜன்னலில் தாவி செல்போன் பறிக்க முயற்சிக்கையில் தவறி விழுந்து கால்களை இழந்தது உறுதியானது. அவன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். கடந்த ஆண்டு நவீனின் கூட்டாளி குடுவை சுரேஷும் ஓடும் இரயிலில் அடிபட்டு கால்களை இழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.