திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலனுக்கு விஷம் ஊற்றி கொலை செய்த சிறுமி?.. காரணம் என்ன?.. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயங்கரம்.!
17 வயது சிறுமியுடன் இன்ஸ்டா காதல் கொண்ட இளைஞருக்கு இன்ஸ்டன்ட் போக்ஸோ கிடைத்தது போதாது என மர்மங்கள் நிறைந்த வழக்கு போல தொடரும் விஷயத்தில் இறுதியில் இளைஞர் மரணித்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். திருப்பூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதாகும் சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 7ம் தேதி சிறுமியின் பிறந்தநாளை கொண்டாட சென்னை சென்றுள்ளார்.
பிறந்தநாளில் பல இடங்களுக்கு சென்று வந்த காதல் ஜோடியில், மீண்டும் ஊர் திரும்ப கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சஞ்சீவ் வந்த நிலையில், அவரை வழியனுப்ப சிறுமியும் வந்துள்ளார். அப்போது, விஷம் கலந்த குளிர்பானத்தை காதலனுக்கு கொடுத்த சிறுமி, காதலன் அதனை கொடுத்ததும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
அதவாது, "உன்னை பழிவாங்கவே சென்னை வரவழைத்தேன். என்னை மன்னித்துவிடு. நான் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளேன்" என கூறியதாக சஞ்சீவ் கூறுகிறார். இதனால் அதிர்ந்துபோன சஞ்சீவ் செய்வதறியாது திகைக்க, காதலனோடு சிறுமி கோயம்பேட்டில் இருப்பது அவரின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் வேகத்தோடு வந்த பெண் வீட்டார், சஞ்சீவை தாக்கிவிட்டு சிறுமியை அழைத்து சென்றுவிட்டனர். அன்றைய நாள் இரவில் அங்கேயே சுற்றி வந்ததாக கூறிய சஞ்சீவ், மறுநாள் காலையில் மாமா செல்வராசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் கோயம்பேட்டில் இருப்பதால், விரைந்து மருத்துவ உதவிகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் காவலர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தவாறு சஞ்சீவ் உயிரிழந்துவிட, அவரின் உடலை குடும்பத்தினர் அவசர ஊர்தியில் அவசரமாய் ஏற்றிக்கொண்டு பரமக்குடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளன. இந்த தகவல் அறிந்த செல்வராஜூ, கோயம்பேடு காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பரமக்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, பிரேத பரிசோதனைக்கு பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைத்துள்ளனர். அதன்பேரில் பேச்சுவார்த்தைக்கு பின் பிரேத பரிசோதனை நடந்து உடல் ஒப்படைக்கப்பட்டது. மறுபுறம் காதலி குளிர்பானம் வாங்கி விஷம் கொடுத்ததாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், கோயம்பேடு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சஞ்சீவ் குளிர்பானம் வாங்கியதற்கான சிசிடிவி காட்சிகள் இருந்துள்ளன. அதேபோல, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே சஞ்சீவுக்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமிக்கு 14 வயது ஆகியுள்ளது.
இதனால் பெற்றோர் தரப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சஞ்சீவ் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் விடுதலையான சஞ்சீவ் அவ்வப்போது சிறுமியை சந்தித்து மீண்டும் காதலிக்கக்கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அதனை பெண் தரப்பு எதிர்த்த நிலையில், அவர்களை பழிவாங்கி வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த சஞ்சீவ் எடுத்த விபரீத விளையாட்டு அவரின் உயிரை இறுதியில் பறித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.