சபரிமலைக்கு சென்று வர பாஜக நிர்வாகியிடம் ரூ.500 மாமூல் கேட்டு திமுக நிர்வாகிகள் அடாவடி.. கடையை அடித்து நொறுக்கி அராஜகம்.!



Chennai Koyambedu DMK Supporters Vanish BJP Supporter Tiffin Shop

 

கட்சி மாறிய முன்னாள் திமுக நிர்வாகியிடம் சபரிமலை சென்று வர மாமூல் கேட்டு தர மறுத்ததால் மாலையை கழற்றிவிட்டுவந்து ரகளை செய்த சம்பவம் நடந்துள்ளது. கட்சி மாறியவரின் கடையை அடித்து நொறுக்கி காட்சிப்பொருளாக்கிய திமுக நிர்வாகிகளின் செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

சென்னையில் உள்ள கோயம்பேட்டை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலக்கிக் கொண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். 

தற்போது மார்க்கெட் பகுதியில் இரவு நேர தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், திமுக நிர்வாகியான விசுவநாதன் மற்றும் முத்து சேர்ந்து தேவேந்திரனிடம் மாமுல் கேட்டுள்ளனர். 

chennai

அவர்கள் கேட்ட தொகையை விட தன்னால் குறைவாகவே கொடுக்க முடியும் என தேவேந்திரன் கூறியிருக்கிறார். இதனால் இது வரப்பு வாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, சபரிமலைக்கு சென்று வந்த விஸ்வநாதன் மற்றும் முத்து, தங்களது கூட்டாளியுடன் தள்ளுவண்டி கடைக்கு சென்று அதனை அடித்து நொறுக்கியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தேவேந்திரன் அளித்த புகார் பேரில் காவல்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்தனர். விசாரணையில், சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக ரூபாய் 500 மாமூல் கேட்ட நிலையில், தேவேந்திரன் அதனை கொடுக்க மறுத்ததால் திமுக நிர்வாகிகளான விஸ்வநாதன் மற்றும் முத்து முன்விரோதத்தை மனதில் வைத்து இவ்வாறான செயலில் ஈடுபட்டது அம்பலமானது.