மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Students-ஆ இதுங்க? அருந்த வாலுங்க.. அரசு பேருந்தில் மீண்டும் அட்ராசிட்டியை தொடங்கிய புள்ளிங்கோஸ்..!
சென்னை நகரில் மக்களுக்கு பெரிதும் உதவும் மாநகர பேருந்துகள் மற்றும் மின்சார இரயில்களில் பயணம் செய்யும் பள்ளி,கல்லூரி மாணவ - மாணவிகள் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில், மாணவர்கள் ரூட்டு தல என்ற பெயரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும் உண்டு.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கும்மிடிப்பூண்டி நோக்கி பயணம் செய்த மின்சார இரயிலில் பட்டா கத்தியை உரசிவிட்டு பயணம் செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக வீடியோ வெளியாகி, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வாறாக பயணம் செய்யும் மாணவர்களை ஓட்டுநர், நடத்துனர், பொதுமக்கள் கண்டித்தால் அவர்களின் மீதும் சில நேரங்களில் தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பிராட்வேயில் இருந்து கோயம்பேடு (தடம் எண் 15) நோக்கி பயணம் செய்த மாநகர அரசு பேருந்தில் மாணவர்கள் பயணம் செய்தனர்.
இவர்கள் பேருந்தின் ஜன்னல், கதவை பிடித்து தொங்கியவாறும், மேல்பகுதியில் ஏறி அடாவடி செய்தவாறும் பயணம் செய்தனர். இந்த சம்பவத்தை மற்றொரு பேருந்தில் பயணம் செய்த பயணி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.