பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இன்ஸ்டா காதலால் இன்ஸ்டன்ட் போக்ஸோ.. 16 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த பயங்கரம்.!
துபாயில் இருந்து இன்ஸ்டாவில் 16 வயது சிறுமியுடன் காதல் செய்த கயவன், சிறுமிக்கு தாலிகட்டி பலாத்காரம் செய்ததால் போக்ஸோவில் கைதாகி இருக்கிறான்.
சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 16 வயது சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். மகளை எங்கும் காணாது பரிதவித்த பெற்றோர், மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்ற 27 வயது இளைஞன் காதல் வலைவீசி தன்னுடன் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, இளைஞனை கைது செய்த காவல் துறையினர் சிறுமியை மீட்டனர்.
விசாரணையில், காதல் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது. இதனையடுத்து, வழக்கு போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு நடந்த விசாரணையில், இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வந்த சிறுமிக்கு ஸ்ரீதரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீதரன் துபாயில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்த நிலையில், இருவரும் காதல் மொழிபேசி வந்துள்ளனர். பின்னர், தாயகம் வந்த ஸ்ரீதரன் சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்துள்ளார். இதனால் ஸ்ரீதரன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.