பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முதல் மனைவிக்கு தெரியாமல் 2 ஆவது திருமணம்.. கைக்குழந்தையுடன் கள்ளக்காதல் ஜோடி.. மனைவி கண்ணீர் குமுறல்.!
தாலிகட்டிய முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, இரண்டாவதாக திருமணம் செய்து தலைமறைவாக இருந்த கணவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள குன்றத்தூர், நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்ரகாஷ் (வயது 38). இவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் திருவள்ளூரை சேர்ந்த மேத்தா (வயது 35) என்ற பெண்ணுடன், ஜெயப்ரகாஷுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்று முடிந்த சில மாதத்திலேயே மனைவியுடன் வாழ பிடிக்கவில்லை என்று ஜெயப்ரகாஷ் கூறியுள்ளார்.
மேலும், "உன் கணவனே சென்றுவிட்டான், நீ எதற்காக இங்கு இருக்கிறாய்?" என மாமனார் - மாமியார் கொடுமை செய்யவே, தாய் வீட்டிற்கு சென்று மேத்தா தங்கியுள்ளார். பின்னர், கணவரை கண்டறிந்து தரக்கூறி குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், சிறுகளத்தூர் பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண்மணி மாயமாகியுள்ளார்.
இவர்கள் இருவரையும் அதிகாரிகள் தேடி வந்த நிலையில், காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் ஸ்ரீ பெரும்புதூர் நீதிமன்றத்தில் மேத்தா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். விசாரணையை துரிதப்படுத்திய காவல் துறையினர், காணாமல் போன ஜெயப்ரகாஷ் - சண்முகப்பிரியா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில், இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தை இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மேத்தாவின் குடும்பத்தினர், ஜெயப்ரகாஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், ஜெயப்ரகாஷ், அவரின் தாய் - தந்தை மற்றும் உறவினர்கள் 10 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் காவல் துறையினர், ஜெயப்ரகாஷை கைது செய்துள்ளனர்.