#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவியின் சந்தேகத்தால் இருதரப்பு சண்டை.. மத்திய அரசு பணியாளர் கொலை., ஒருவர் படுகாயம்.! சென்னையில் பகீர் சம்பவம்.!!
கணவர் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் வயப்பட்டதாக மனைவி சந்தேகித்து செய்த தகராறால், பெண் தரப்பை சார்ந்தவரின் உயிர் பறிபோனது. ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள குன்றத்தூர், சம்பந்தம் நகரை சேர்ந்தவர் பத்மகுரு (வயது 37). இவர் குன்றத்தூர் பகுதியில் இறைச்சிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி சிந்து (வயது 30). பத்மகுருவுக்கும், குன்றத்தூர் பகுதியை சார்ந்த மீனா (வயது 29) என்பவருக்கும் இடையே பழக்கம் இருப்பதாக நினைத்து சிந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார்.
இதனால் பத்மகுருவின் மனைவி சிந்து, மீனாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மீனா, அவரது கணவர் ரஜினி மற்றும் உறவினர்களுடன் பத்மகுரு வீட்டிற்கு சென்று தகராறு செய்து வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் இருதரப்பு இடையே காரசார விவாதம் நடந்துள்ளது.
உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற பத்மகுரு, வீட்டில் இருந்த கத்தியால் மீனாவின் உறவினர்கள் குமரன் (வயது 33), விஷ்வா (வயது 19) ஆகியோரை குத்தியுள்ளார். படுகாயமடைந்த குமரன் சமப்வ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விஷ்வா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குன்றத்தூர் காவல் துறையினர், குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குமரன் ஆவடியில் உள்ள மத்திய கனரக தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறைச்சி வியாபாரி பத்மகுருவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.