#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யார் தாதா? போட்டி தகராறில் இளைஞர் கொலை.. 4 பேர் கும்பலுக்கு மாவுக்கட்டு.!
சென்னையில் உள்ள குன்றத்தூர், திருமுடிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் அப்பகுதியில் குட்டி தாதா போல வலம்வந்துள்ளார்.
நிஷாந்துக்கும், அதே பகுதியை சேர்ந்த கவியரசு, அஜீத், கார்த்திக், மோகன் உட்பட 6 பேர் கும்பலுக்கும் இடையே யார் பெரிய தாதா? என்ற போட்டி இருந்துள்ளது.
அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே தகராறு நடக்க, கடந்த வாரம் நிஷாந்த் மேற்கூறிய 4 பேர் உட்பட 6 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடிவர, மாமல்லபுரம் பகுதியில் பதுங்கியிருந்த கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களை பிடிக்கச்சென்றபோது தப்பிச்செல்ல முயன்று விபத்தில் சிக்கிய கவியரசு, அஜீத், கார்த்திக், மோகன் ஆகிய 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டது.