#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிறுமியை கடத்தி சென்று அத்துமீறிய இளைஞன்.. போக்ஸோவில் உள்ளே தள்ளிய போலீஸ்.!
ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் குன்றத்தூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள குன்றத்தூர் ஒண்டி காலனி பகுதியை சார்ந்தவர் பாண்டியன் (வயது 24). இவர் குன்றத்தூர் பள்ளியில் பயின்று வந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்து, சிறுமியின் பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமி கடந்த 1 ஆம் தேதி திடீரென மாயமாகவே, சிறுமியின் பெற்றோர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் பாண்டியன் என்ற வாலிபர், தங்களது மகளை கடத்தி சென்றத்துவிட்டதாக புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கையில், 15 வயது சிறுமியை பாண்டியன் காதலித்து வந்தது உறுதியானது. பாண்டியனின் அலைபேசி எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், அவர் வியாசர்பாடியில் இருப்பது உறுதியானது.
வியாசர்பாடிக்கு புறப்பட்டு சென்ற காவல் துறையினர், பாண்டியனை கைது செய்து சிறுமியை மீட்டனர். விசாரணையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய பாண்டியன், அவரை திருமணம் செய்வதாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக அத்துமீறி இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, பாண்டியனை குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.