வெள்ளத்தில் சிக்கிய சென்னை விமான நிலையம்.. நாளை வரை அதிகாரபூர்வ மூடல்.. இண்டிகோ விமானியின் மாஸ் செயல்.!



Chennai MAA International Airport Terminus Closed till 1 Dec 2024 due to Fengal 

சென்னை விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, வங்கக்கடல் பகுதியில் உருவாகிய பெஞ்சல் புயல் கரையை கடக்கிறது. இன்று அதிகாலை 4 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. 

அம்மா உணவகத்தில் இலவச உணவு

சென்னை மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது. சென்னை மீனம்பாக்கம் பகுதியில் இன்று பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்த நிலையில், விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க: #Breaking: மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்; மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.!

இண்டிகோ அறிவிப்பு

முதலில் இண்டிகோ நிறுவனம் தனது சேவையை சென்னையில் இருந்து தற்காலிக ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், மதியம் 12 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை விமான நிலையம் முற்றிலும் மூடப்பட்டது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வந்த பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

விமான சேவைகள் ரத்து & விமான நிலையம் மூடல்

55 விமான சேவைகள் ரத்து

இந்நிலையில், புயல் காரணமாக பலத்த காற்று வீசும் நிலையில், சென்னைக்கு வரவேண்டிய 55 விமான சேவைகள் ரத்து செய்ய்யப்பட்டுள்ளன. சென்னை நோக்கி வந்த 19 விமானங்கள், பெங்களூர் உட்பட பிற விமான நிலையங்களுக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் வேறு வழியின்றி தங்களின் இலக்கில் இறங்காமல், மாற்று விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகி இருக்கிறது.

இரயில் சேவையும் பாதிப்பு

அதேபோல, சென்னை தாம்பரம் - கடற்கரை, கடற்கரை - வேளச்சேரி, கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்பரம் இரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில், இரயில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள மழை நீர் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இரயில் பல்லவராத்திலும், செங்கல்பட்டு - தாம்பரம் இரயில் வண்டலூரில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில், இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று மழைக்கு நடுவே விமானியின் சாமர்த்திய முயற்சியால் பத்திரமாக தரையிறப்பட்டது. இதன் பரபரப்பு காணொளி வெளியாகி இருக்கிறது.

 

தற்போதைய அறிவிப்பின்படி சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை (டிச 1, 2024 @04:00 AM) வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "தமிழ் சொல்லித்தந்தது மனிதத்தை" - வெள்ளநீரில் சிக்கிய ஆட்டோவுக்கு உதவிய பேருந்து.. நெகிழவைக்கும் காணொளி.!