சிறுமி பாலியல் பலாத்கார விவகாரம்.. அண்ணனை சிக்கவைத்த தம்பி.. விசாரணையில் அதிர்ச்சி திருப்பங்கள்.!
சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் 16 வயது சிறுமி பலாத்கார வழக்கில், மாதவன் என்பவர் 2012 ஆம் வருடத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, 2 மாதங்கள் கழித்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த மாதவன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினார். அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் பிராவின் டேனி தலைமையிலான காவல் துறையினர் மாதவனை தேடிய நிலையில், அவர் மாதவரம் பகுதியில் தங்கியிருப்பதாக தெரியவந்தது. இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து மாதவன் என்ற நபரை பிடித்து விசாரணை செய்தபோது, மேற்கூறிய வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. மேலும், நான் நீதிமன்றத்திற்கு சென்றதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
காவல் துறை அதிகாரிகள் குற்றவாளியின் பள்ளி சான்றிதழை காண்பிக்க, இது என்னுடையதுதான். ஆனால்., அது மாயமாகிவிட்டது. எனது சகோதரர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கிறார். தம்பி தர்மலிங்கத்தின் மீது சந்தேகம் உள்ளது. எனது ஆவணங்களை அவர் திருடி இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வந்த சோணைமுத்து என்பவரின் மகன்கள் மாதவன் (வயது 36), தர்மலிங்கம் (வயது 32). இவர்களில் தர்மலிங்கத்திற்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். மாதவன் சென்னை வேளச்சேரி பகுதியில் தங்கியிருந்து பணியாற்றி வந்த நிலையில், தர்மலிங்கம் கடந்த 2011 ஆம் வருடத்தில் அண்ணனை பார்க்க சென்னை சென்றுள்ளார்.
பின்னர், வண்ணாரப்பேட்டையில் இருக்கும் நண்பரின் வீட்டிற்கு சென்ற தர்மலிங்கம், மாதவன் என்ற பெயரில் 16 வயது சிறுமியுடன் பழகி, ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், கடந்த 2012 ஆம் வருடத்தில் தர்மலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த மாதவன், அண்ணனின் வீட்டிற்கு சென்று சான்றிதழை திருடி, போலி பாஸ்போர்ட் மூலமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
சிங்கப்பூரில் 2 வருடங்கள் வரை பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2017 ஆம் வருடம் சிங்கப்பூரில் வசித்து வந்த கேரள பெண்ணை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி சென்னை வந்து மனைவியுடன் வசித்து இருக்கிறார். தனிப்படை காவல் துறையினர் தர்மலிங்கத்தை அதிரடியாக கைது செய்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியும் தர்மலிங்கத்தின் அடையாளத்தை உறுதி செய்தார். தர்மலிங்கத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.