மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னைக்கு வேலைக்கு வந்த இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொழிலில் தள்ளிய பயங்கரம்... 2 பேர் பரபரப்பு கைது.!
வேலைக்காக சென்னை வந்த இளம்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்துச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள மடிப்பாக்கம், ராம் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பல ஆண்கள் சம்பந்தம் இல்லாமல் வந்து செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டிற்குள் பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்துவது அம்பலமானது. இதுகுறித்த விசாரணையில் புரோக்கர் பாஷா பாய், தனது கூட்டாளிகள் தேவேந்திரன் மற்றும் சரண்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து பாலியல் தொழில் நடத்தி வந்தது அம்பலமானது.
சென்னைக்கு வேலைதேடி வந்த பெண்ணிடம், வேலை வாங்கி தருவதாக கூறி அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது அம்பலமானது. இதனையடுத்து, சேலத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 25), சரண்ராஜ் (வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.