#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கெத்து காண்பிப்பதாக நினைத்து 7 பேருக்கு தினமும் அடி... ஆத்திரத்தில் படுகொலை சம்பவம்.. பரபரப்பு வாக்குமூலம்.!
உணவு டெலிவரி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 7 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னையில் உள்ள மெரினா, நடுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் அஜித் குமார் (வயது 24). இவர் ஜொமேடோ உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வீட்டு வாசலில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.
படுகாயமடைந்த அஜித் குமாரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே, மயிலாப்பூர் காவல் உதவி ஆணையர் கவுதமன் மேற்பார்வையில், மெரினா காவல் துறையினர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி ரியாஸ் பாஷா (வயது 20), வினோத் குமார் (வயது 21), சலீம் (வயது 20), ஆகாஷ் (வயது 21), கார்த்திக் (வயது 23), தமிழரசன் (வயது 22) ஆகிய 7 பேரை கைது செய்தனர். விசாரணையில், அஜித் குமார் தன்னை கெத்தான ஆள் போல கட்டிக்கொள்ள, போதையில் வந்து மேற்கூறியோரை தாக்கி ரகளை செய்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 7 பேர் கும்பல் அஜித் குமாரை கொலை செய்ய திட்டமிட்டு, சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு வந்தவரை வீட்டு வாசலில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது என்பது உறுதியானது. இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.