தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Breaking: தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை..ரெட் அலெர்ட் நீக்கம் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
வங்கக்கடலில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி வலுவடைந்து தமிழகத்தில் நாளை கரையை கடக்ககூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரெட் மற்றும் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
நேற்று இரவு முதலாகவே சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ததை தொடர்ந்து 28 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது மதியம் 2 மணியாகவுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருவதால் எங்கும் மேகமூட்டம், மழை என்று இருந்துவருகிறது.
இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என்றும், வங்ககடலில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை நகரில் இன்று, நாளை கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.