26 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



Chennai meotrological heavy rain alert

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். 

15ஆம் தேதியான இன்று விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, திருவண்ணாமலை, சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தேனி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

chennai

 தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.