திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாண்டுபோன மனிதம்.. விபத்தில் உயிருக்கு போராடியவருக்கு உதவாமல் செல்போன், பணத்தை திருடிச்சென்ற கயவர்கள்..! துடிதுடித்து இறந்த இளைஞர்..!!
சென்னையில் இருக்கும் நங்கநல்லூர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அங்கிருக்கும் வேகத்தடையில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் அதிவேகத்துடன் வந்ததால் இந்த விபத்து நடந்த நிலையில், விபத்தில் சிக்கி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த இளைஞரை மீட்காமல் அப்படியே சென்ற சிலர் அவரது உடைமைகள் மற்றும் பணம், செல்போன் ஆகியவற்றை திருடி செல்லும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்லவில்லை. அதனை கயவர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.