மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிவிங் டுகெதர் காதலன் கைவிட்டதால் பரிதாபம்; பெண் தற்கொலை முயற்சி..! மரண வாக்குமூலத்தில் பகீர்.!!
சென்னையில் உள்ள நொளம்பூர் பகுதியில் வசித்து வருவார் சம்பத் (வயது 33). இவர் சாப்ட்வேர் எஞ்சினியர் ஆவார். தியாகராஜா நகரில் வசித்து வரும் 33 வயது இளம்பெண் - சம்பத் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் போரூர், அய்யப்பன்தாங்களில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கணவன் - மனைவியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த பெண்மணி, சானிடைசர் மற்றும் அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார்.
அவரை மீட்ட உறவினர்கள் பெண்ணை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, மருத்துவமனைக்கு நேரில் சென்ற காவல் துறையினர் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அப்போது, காதலித்து திருமணம் செய்யாமல் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், வாலிபருக்கு மற்றொரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்" என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பத்தை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.