திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதல் கணவனால் கஞ்சா கேசில் கைதான மனைவி.. தவறிய காதலால் தடம்புரண்டுபோன வாழ்க்கை..!
முதல் காதலன் குழந்தையை கொடுத்துவிட்டு சென்றுவிட, இரண்டாவது காதலன் ரௌடியானதால் தடம்புரண்ட பெண்ணின் வாழ்க்கையில் கஞ்சா வழக்கு சேர்ந்துகொண்டு சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெகருன்னிஷா (வயது 22). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பி.எஸ்சி படித்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும்போது காதல் வயப்பட்டு, குழந்தையை பெற்றெடுத்து வாழ்க்கையின் தொடக்கத்திலேயே அதனை நரகமாக்கிக்கொண்டார். ஏனெனில், அவரின் முதல் காதலர் குழந்தையை தந்துவிட்டு விலகி சென்றுவிட்டார்.
இதற்கிடையில், இளவயது ரௌடியான முகமது ரபி @ மிட்டாய் ரபி (வயது 22) என்பவரோடு ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து, இருவரும் காதல் வயப்பட்டு இருக்கின்றனர். பின்னர் திருமணமும் செய்துகொண்டனர். ஜெகருன்னிஷா குற்றப்பின்னணி இல்லாதவர் ஆவார். ஆனால், ரௌடியான ரபி மீது 3 கொலை முயற்சி, 2 கஞ்சா உட்பட 12 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
12 வழக்குகளால் அவ்வப்போது சிறைக்கு சென்று வரும் ஜெயில் கைதியாக இருந்த ரபியால், ஜெகருன்னிஷா குடும்பத்தை நடத்த வழியின்றி கணவரை போல கஞ்சா விற்பனை செய்யும் தொழிலை கையில் எடுத்துள்ளார். நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் நேற்று கஞ்சா விற்பனை நடந்துள்ளது.
இதனையடுத்து, தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் ஜாமினில் வெளியே சுற்றிய கணவருடன் கஞ்சா விற்பனை செய்துகொண்டு இருந்த ஜெகருன்னிஷா, ரௌடி ரபி ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், இருவரையும் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.