#Breaking: தனியார் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும்; உரிமையாளர்கள் அதிரடி..!



Chennai Omni Bus Service Starts from Koyambedu 

 

சென்னையில் உள்ள கிளம்பாக்கத்தில், தென்மாவட்டங்களுக்கான பேருந்து வருகை - புறப்பாடு பிரத்தியேக முனையம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் தனியாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்கிக்கொள்ள அனுமதி வழங்கியது. 

இதனையடுத்து, இன்று (பிப்ரவரி 10, 2024) முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து தங்களது வாகன நிறுத்துமிடத்தில் பயணிகளை ஏற்றி புறப்படும் என அறிவித்து இருக்கிறது. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிறுத்தம் மூடப்பட்டு இருப்பதால், அந்தந்த வாகன உரிமையாளர்களின் அலுவலகங்களில் இருந்து புறப்படும் வாகனங்கள் மதுரவாயல் வழியாக போரூர் சுங்கச்சாவடி, கிளம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும். 

தனியார் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டபின் போரூர் சுங்கச்சாவடி மற்றும் கிளம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மட்டுமே பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மாதவரம் பகுதியில் இருந்து புறப்படும் தென்மாவட்ட பேருந்துகள் சூரப்பேடு, போரூர் சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லும். பெருங்குளத்தூருக்கு பேருந்துகள் செல்லாது, அவ்வழியே பயணித்தாலும் நிற்காது.

தலைப்பு படம்: மாதிரி / கோப்பு படம்