53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மனைவிக்கு பிறந்தநாளில் புடவை கூட வாங்கிக்கொடுக்க முடியலை - பிறந்தநாள் வாழ்த்துக்கூறி தூக்கில் தொங்கிய கணவன்..!
சென்னையில் உள்ள ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் இளையராஜா (வயது 40), ப்ளம்பராக பணியாற்றி வருகிறார். இளையராஜாவின் மனைவி தேவி (வயது 31).
தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரும் புதுமண தம்பதிகள் என்பதால், ஓராண்டாக அன்பை அளவுகடந்து பரிமாறி வாழ்ந்து இருக்கின்றனர்.
இந்நிலையில், தேவிக்கு நேற்று பிறந்த நாளாகும். இதனால் அவருக்கு புது துணி வாங்கிக் கொடுக்க, அம்மாவிடம் ரூபாய் 2000 பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்துபோன இளையராஜா, நள்ளிரவு 12 மணியளவில் தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு, படுக்கையறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் பிறந்தநாளில் புடவை வாங்கிக்கொடுக்க இயலாத ஏக்கத்தில் கணவன் தற்கொலை செய்த சோகம் தேவி மற்றும் அவரின் குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.