கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
காதலித்த 30 ஆவது நாளில் தனிமை.. தொடர் அத்துமீறலால் 4 மாத கர்ப்பிணியான சிறுமி.!

சென்னையில் உள்ள பல்லாவரம், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகளை அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்கு விசாரணை தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
களத்தில் இறங்கிய அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது பேரதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குன்றத்தூரை சேர்ந்தவர் விகேஷ் (வயது 22). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் கார்டனில் வேலை பார்த்து வருகிறார். சிறுமி அப்பகுதி வழியாக சென்று வரும் போது, விக்னேஷ் சிறுமிக்கு தனது காதல் வலையை வீசியுள்ளார்.
முதலில் நட்பாக தொடங்கிய பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, கடந்த 6 மாதமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலித்த 30 நாட்களில் சிறுமியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில், அப்போது நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, விக்னேஷின் இல்லத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில் சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனை அவ்வப்போது வாடிக்கையாக்கவே சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.