மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போனுக்கு சார்ஜ் போடுகையில் மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்.. மக்களே கவனமாக இருங்கள்., அலட்சியம் வேண்டாம்.!
கட்டிட தொழிலாளி தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் போடுகையில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள பல்லாவரம், திரிசூலம் துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மகேஷ் (வயது 36). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
மகேஷ் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் நிலைகுலைந்து விழவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மகேஷை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் மகேஷ் உயிரிழந்தது உறுதியானது. இதனைக்கேட்ட மகேஷின் மனைவி மற்றும் குழந்தைகள் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பல்லாவரம் காவல் துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.