பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சென்னையில் ஒரு வழியாக தீர்ந்தது தண்ணீர் பிரச்னை! சந்தோஷத்தில் சென்னை மக்கள்!
நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிக்கவே தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் அவஸ்தை பட்டுவந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் வாரங்களாக ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நேற்று பெய்த மழையால் தண்ணீர் இல்லாத கிணறுகளிலும், போர்களிலும் தண்ணீர் நிரம்பியது. கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் வராத போர்களிலும் இன்று காலை முதல் தண்ணீர் வந்தது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்றுஇ இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்தால் சென்னையில் தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும் என சென்னைவாசிகள் கூறுகின்றனர்.