சென்னை வாகன ஓட்டிகளுக்கு உற்சாக செய்தி; மாநகர் முழுவதும் பசுமைநிற பந்தல்.!



Chennai Police make Green panthal 

 

கோடைகாலத்தில் உக்கிரத்தால் தமிழ்நாட்டின் பல மாவட்டத்தில் இயல்பு வெப்பநிலை 40 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. இதனால் வெயில் சார்ந்த பிரச்சனைகளுக்கு மக்கள் உள்ளாகி பரிதவித்து வருகின்றனர். 

அத்தியாவசிய பணிகள் காரணமாக நண்பகல் வேலையிலும் மக்கள் வெளியே செல்லும் சூழ்நிலை உருவாகும் காரணத்தால், மயக்கம், உடலில் நீர் இழப்பு உட்பட பல துயரங்கள் தொடருகிறது. 

வெயிலால் மக்கள் படும்துயரை துடைக்க நடவடிக்கை: 

இந்நிலையில், சென்னையில் இருக்கும் பலரும் அத்தியாவசிய பணிகளுக்காக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, அவர்கள் சிக்னலில் காத்திருக்க வேண்டிய சூழல் உண்டாகிறது. 

இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க, ரூ.40 இலட்சம் செலவில் பல்வேறு இடங்களில் பசுமை நிற பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. 

பசுமை பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்:

அதன்படி சென்னை நகரில் ராஜா முத்தையா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பு, திருவள்ளூர் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை சிக்னல் உட்பட பல்வேறு இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பலத்த காற்றடித்தாலும் தாங்கும் வகையில், 17 அடி உயரத்திற்கு மேல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.