டிடிஎப் வாசனை தொடர்ந்து விஜே சித்துவும் கைது? - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.!
யூடியூபில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வந்த டிடிஎப் வாசன், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அதிவேகத்தில் வந்து விபத்தில் சிக்கியதை தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, வாகன பாகங்கள் விற்பனை செய்யும் கடையை திறந்தார். இதனிடையே, கார் ஒட்டியது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டார்.
விஜே சித்துவுக்கு எதிராக வழக்குப்பதிவு
இந்நிலையில், விஜே சித்து வாகனத்தை இயக்கியபடி செல்போன் பேசியதாகவும், அவர் பேசும் வீடியோவில் தகாத வார்த்தையால் பேசி வருவதாகவும், இதனால் இளம்தலைமுறை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அவரின் மீது நடவடிக்கை எடுத்து, யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுபானம் குடித்தவர் மர்ம மரணம்; சீர்காழியில் நடந்த சோகம்.!
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விஜே சிந்துவின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடும்பத்துக்காக வெளிநாட்டில் உழைத்த கணவனுக்கு மகளை கொன்று துக்க செய்தி அனுப்பிய தாய்; கள்ளகாதலால் சோகம்.!