மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உயிர்பறித்த விசில்".. விசிலை முழுங்கிய 1 வயது குழந்தை மூச்சுத்திணறி பலி.. பொன்சிரிப்பு நொடியில் மறைந்த சோகம்.!
தனது சகோதரருடன் இன்முகத்தில் சிரித்து விளையாடிய 1 வயது பச்சிளம் பிஞ்சு விசிலை முழுங்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள பூந்தமல்லி, லட்சுமிபுரம் பத்மாவதி நகரில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (வயது 38). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஆனந்தராஜின் மனைவி வனஜா. தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற 3 வயது மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
இன்று வழக்கம்போல குழந்தைகள் இருவரும் விளையாட்டு பொருட்களை வீட்டில் வைத்துக்கொண்டு விளையாடி இருந்துள்ளனர். அப்போது, பச்சிளம் குழந்தை கயல்விழி விசிலை எடுத்து ஊதி மகிழ்ச்சியாக சகோதரருடன் விளையாடி இருக்கிறார். அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக கயல்விழி விசிலை விழுங்கிதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கி முதுகில் தட்டியபின் வாய்க்குள் இருந்த விசில் கீழே விழுந்துள்ளது. அதனைப்பார்த்ததும் தான் குழந்தை விசிலை விழுங்கிய சம்பவம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. பதறிப்போன பெற்றோர் போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
அங்கு கயல்விழியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் கயல்விழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.