மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒருவருக்கு தெரியாமல் இன்னொன்று என காதல் - கள்ளக்காதல்களால் சிறைபுறாவாக மடல் அழகி, தொழிலதிபர்.. பகீர் தகவல்.!
தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் வசித்து வந்த தொழிலதிபர் சேகர். இவர் தனது திருமணத்தை மீறிய உறவால், ஸ்வாதி என்ற மாடலுடன் மோகம் கொண்டு உல்லாசமாக சுற்றிவந்தவர். மேலும், தனது கள்ளக்காதலியை பார்க்கச்செல்லும் நேரத்தில் வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்று கள்ளக்காதலுக்கு அணிவித்து அழகுபார்த்தவர்.
வீட்டில் இருந்த 550 சவரன் நகைகள் அடுத்தடுத்து மாயமாக, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. தற்போது சேகர் மற்றும் ஸ்வாதி ஆகியோர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இருவரிடமும் தனித்தனியே விசாரணை நடந்தது. இதில், ஸ்வாதியிடம் நடந்த விசாரணையில் மேலும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, மனைவியை மறந்து ஸ்வாதியிடம் சேகர் கொடுக்கும் நகைகளை, ஸ்வாதி தனது காதலனுக்கு கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். சேகரின் பணம் மற்றும் நகையை வைத்து அன்பு காதலனுக்கு விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை பரிசாக கொடுத்து, அதனைவைத்து இருவரும் உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர். சம்பவத்தில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், ஸ்வாதி காதலன் என்று நினைத்தவன் ஸ்வாதிகே தெரியாமல் 3 பெண்களை காதலியாக வைத்திருந்து, ஸ்வாதி கொடுத்த பணம் மற்றும் நகையைய் அவர்களுக்கு செலவழித்து வந்துள்ளான் என்பதுதான்.