#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. மண்ணெண்ணெய் ஊற்றி., கணவன் செய்த கொடூர செயல்.!
சென்னையில் உள்ள வளசரவாக்கம், பெத்தானியா நகரில் வசித்து வருபவர் ராஜா. இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ராதா. இவர் கோடம்பாக்கத்தில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணாக பணியாற்றுகிறார்.
ராஜாவுக்கு தனது மனைவி ராதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து கணவன் - மனைவி இடையே அவ்வப்போது தகராறும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று இரவிலும் தம்பதிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ராஜா, மனைவி ராதாவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயின் வெப்பம் தாளாது ராதா கதறிய நிலையில், பதறிச்சென்ற அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றினார்.
பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்ட ராதா, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர்.