#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
துணை நடிகை கூட்டுப்பலாத்கார விவகாரம்.. திட்டம்போட்டு பரபரப்பு சம்பவம்.. பகீர் வாக்குமூலம்.!
சினிமா துணை நடிகை வீடுபுகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், திட்டம்போட்டு அவரை பலாத்காரம் செய்த பேரதிர்ச்சி தகவலின் பகீர் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள வளசரவாக்கம் ஏ.கே.ஆர் நகரில் சினிமா துணை நடிகை இருக்கிறார். இவர் பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது, இரவு 10:30 மணியளவில் நடிகையின் வீட்டு கதவை 2 பேர் தட்டியுள்ளனர். கதவை திறந்த நடிகை வந்தவர்களை யார்? என்ன வேண்டும்? என கேட்டுள்ளார்.
பதில் தெரிவிக்காத இருவரும் திரைப்பட பாணியில் வீட்டிற்குள் நுழைந்த நிலையில், கத்தி முனையில் ரூ.50 ஆயிரம் பணம், நான்கரை சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர். மேலும், நடிகையை நடனம் ஆடச்சொல்லி, அவரை பாலியல் பலாத்காரமும் செய்து தப்பி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக துணை நடிகை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தன்னை அடையாளம் தெரியாத 2 பேர் கத்தி முனையில் மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்தாகவும், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிராவும் ஆய்வு செய்யப்பட்டது. கேமிராவில் 2 பேரின் உருவம் பதிவாக, அவர்கள் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.
இதனையடுத்து, ராமாபுரத்தில் வசித்து வரும் கண்ணதாசன் என்பவரை கைது செய்து, அவரின் வாக்குமூலத்தின் பேரில் அயப்பாக்கம் செல்வகுமார் என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிகையின் வீட்டிற்கு சென்று கத்தி முனையில் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியாக, பேரதிர்ச்சி தகவலாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரமும் வெளியானது.
துணை நடிகை தனியே வசித்து வருபவத்தை அறிந்த கண்ணதாசன் மற்றும் செல்வகுமார், அவரின் வீடுபுகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அப்பகுதிக்கு சென்று நோட்டமிட்டும் வந்துள்ளனர். சம்பவத்தன்று இருவரும் துணை நடிகையின் வீட்டிற்கு சென்று கத்தி முனையில் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு, நடிகையை பலாத்காரம் செய்தும் தப்பி சென்றுள்ளனர். இருவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். நடிகையின் பணம் மற்றும் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
செல்வகுமார் அயப்பாக்கம் பகுதியில் இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி ஆகும். கண்ணதாசன் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நடிகை வசித்து வரும் குடியிருப்பு வளாகம் பரபரப்பு மிகுந்த பகுதிகளில் ஒன்றாகும். இதனால் ஆட்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். இதுபோன்ற இடத்திலேயே துணைநடிகைக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.