திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்ரீ பயர் விளையாடியதை தாய் கண்டித்ததால் சோகம்.. மகன் தற்கொலை.. ஆதரவற்று கண்ணீரில் தவிக்கும் தாய்.!
செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்த காரணத்தால், மகன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள புழல், லட்சுமிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மீனா. இவரின் மகன் சுரேஷ் (வயது 16). மீனா தனது கணவரை 7 வருடத்திற்கு முன்னதாக பிரிந்து, மகனுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
சிறுவன் சுரேஷ் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இணையவழி வகுப்புக்காக தாய் வாங்கிக்கொடுத்த செல்போனை வைத்து, சுரேஷ் படிப்பில் நாட்டம் செலுத்தாமல் ப்ரீ பயர் கேம் விளையாடி வந்துள்ளார்.
சுரேஷின் கேம் நாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்ல, இதனைகவனித்த தாயார் மீனா தனது மகனை 4 நாட்களுக்கு முன்னதாக கண்டித்து இருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சுரேஷ் வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், சுரேஷ் நேற்று திடீரென மாயமான நிலையில், அவரை தேடி அலைந்த போது, வீட்டின் எதிர்புறம் உள்ள ஆளில்லாத வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவாறு பிணமாக தொங்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மீனா புழல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவன் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.