திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கள்ளகாதலியின் குழந்தை அடித்துக்கொலை; புழலில் பயங்கரம்.!
சென்னையில் உள்ள புழல் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரின் மனைவி பிரியா. தம்பதிகளுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
பிரியா தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, பிரியாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் பழக்கம் ஏற்படவே, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
இதனால் இருவரும் தனிமையில் பல நேரங்களில் மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது இவர்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக பிரியாவின் 5 வயதுடைய பெண் குழந்தை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமியின் மீது எப்போதும் ஆவேசத்தில் இருந்து வந்த ஸ்ரீனிவாசன், சம்பவத்தன்று தனது உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்த குழந்தையை அடித்துக்கொலை செய்து வாளியில் போட்டுள்ளார்.
சிறுமி உயிரிழந்ததை உறுதி செய்த கயவன், பின் ஊரை நம்பவைக்க நாடகமாடி குழந்தை கழிவறையில் மயங்கி இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் உண்மை அம்பலமாகிவிட, காவல் துறையினர் சீனிவாசனை விசாரணை செய்தபோது கொலை உறுதியானது. தற்போது கைது செய்யப்பட்ட சீனிவாசன் சிறையில் அடைக்கப்பட்டார்.