திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வினையான விளையாட்டு: மன்மதன் திரைப்பட பாணியில் அண்ணனின் கண்முன் தம்பி சாவு.. பதறவைக்கும் சோகம்.!
அண்ணனுடன் தம்பி விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், விளையாட்டு வினையாகி உயிர் பலியான சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள புழல் புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் தனது 11, 14 வயது மகன்களுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சகோதரர்கள் வீட்டிற்குள் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, அமுதாவின் இளைய மகன் கார்த்திக் (வயது 11), தனது அண்ணனிடம் தூக்கு மாட்டிக்கொள்வது போல நடித்து காண்பித்து இருக்கிறான். அண்ணன் ஜன்னல் வழியே தம்பியை பார்த்துக்கொண்டு இருந்துள்ளான்.
அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக கார்த்திக்கின் கழுத்தில் சேலை சிக்கிக்கொள்ள, சிறுவன் துடிதுடித்து உயிரிழந்துள்ளான். தம்பி உயிருக்கு போராடுவதை கண்டு அண்ணன் அலறவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.
ஆனால், அதற்குள் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மன்மதன் திரைபட பாணியில் அண்ணனின் கண்முன் தம்பி உயிரிழந்துள்ளார்.