திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஏசி, பைக் வாங்க எவண்டி காசு கொடுத்தான்?.. சல்லிப்பயலின் சந்தேக புத்தியால் மனைவி கொடூர கொலை.!
உள்ளூரில் வழக்குடன் திரிந்தவனை திருமனம் செய்த பெண், இறுதியில் அவனின் சந்தேக புத்தியால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள புழல் அம்மன்கோவில் தெருவை சார்ந்தவர் தமிழரசன் (வயது 34). இவரது மனைவி சபரிதா (வயது 29). தமிழரசனின் மீது மீஞ்சூர் மற்றும் காட்டூர் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 3 மாதமாக புழலில் மனைவியுடன் தமிழரசன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சபரிதா புதிய இருசக்கர வாகனத்தை வாங்கிய நிலையில், அவ்வப்போது வெளியே சென்று வந்துள்ளர். இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட தமிழரசன், மனைவியிடம் எங்கே சென்று வருகிறாய்? என கேட்கையில் சரியான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நீ அவ்வப்போது வெளியே செல்லவேண்டாம் என தமிழரசன் மனைவி சபரிதாவை கண்டித்து இருக்கிறார். இதனையும் மீறி சபரிதா சம்பவத்தன்று வெளியே சென்று வரவே, ஆத்திரமடைந்த தமிழரசன் தனது மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தலைமறைவாகினார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த புழல் காவல் துறையினர் தமிழரசனை தேடி வந்த நிலையில், நேற்று மாலை புழல் காவாங்கரை ஏரி பகுதியில் மதுபோதையில் சுற்றித்திரிந்த தமிழரசனை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவிக்கு தனக்கு தெரியாமல், எப்படி பணம் வந்தது என்பதை கூறாமல் புதிய பைக் மற்றும் ஏ.சி வாங்கியதால் சந்தேகமடைந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.