திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னை விமான நிலையமா? கடலா?.. ஆரம்பிச்சிட்டாங்கல்ல நீச்சல் அடிக்க.. மழையில் தத்தளித்த சம்பவம்..! வைரல் வீடியோ உள்ளே.!
தலைநகர் சென்னையை சுற்றிலும், ஆந்திராவில் கரையை கடக்கவிருந்த மிக்ஜாங் புயலின் மழைகொடுக்கும் மேகங்கள் சூழ்ந்ததால் இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நீர் வெளியேற வழியின்றி வீதிகளில் தேங்கி, நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. 49 ஆண்டுகளில் இல்லாத அளவு 29% கூடுதல் மழைபொழிவை அக்டோபர் மாதங்களில் இருந்து தற்போது வரை சென்னை சந்தித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக, சுரங்கபாதைகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீரில் இளைஞர்கள் நீச்சல் அடிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
அதேபோல, சென்னை விமான நிலையம் முழுவதும் நீரின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் சென்னை வரவேண்டிய விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
வரும் 2 நாட்களுக்கு சென்னைக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள், தங்களின் பயணத்தை தள்ளிபோடுமாறும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
Chennai Seaport 👀✈️ pic.twitter.com/4uxtxLWrY2
— Breaking Aviation News & Videos (@aviationbrk) December 4, 2023
Our very own Michael Phelps and Ian Thorpe having a nice swim at the flooded Madley Subway. #ChennaiRains #CycloneMichaungpic.twitter.com/J8SHE3lsoR
— Srini Mama (@SriniMaama16) December 4, 2023