மனைவியின் கள்ளக்காதலால் கம்பி என்னும் கணவன்; கூடா ண்டட்பு குடும்பத்துக்கே ஆப்பு வைத்த சோகம்.!



CHENNAI REDHILLS AFFAIR CLASH ONE iNJURED

சென்னையில் உள்ள செங்குன்றம், செல்வகணபதி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார் (வயது 35). இவரின் மனைவி கற்பகம். தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். லாரி ஓட்டுநர் பிரேம், அவ்வப்போது வெளியூர், வெளிமாநில சவாரிக்கு சென்று வருவார். வீட்டில் தனியாக இருந்த கற்பகத்துக்கு, பெரம்பூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (30) என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் கள்ளகாதலாகவே, பிரேம் சவாரி சென்றபோதெல்லாம் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே, போதைக்கு அடிமையான ஹரிகிருஷ்ணன், கள்ளக்காதலி கற்பகத்துக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்க தொடங்கி இருக்கிறார். மேலும், தான் அழைக்கும்போதெல்லாம் வந்து, தான் சொல்லும் விதமாக உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் கர்ப்பமாக ஹரியை தவறிது வந்துள்ளார். இவ்வாறான சமயத்தில் ஹரி கற்பகத்தின் வீட்டுக்கு சென்று துன்புறுத்தி இருக்கிறார். இதனிடையே, நேற்று முன்தினம் ஹரி கற்பகத்துக்கு போன் செய்து இருக்கிறார். கற்பகம் போனை எடுக்காமல் இருக்கவே, இரவு 8 மணியளவில் கள்ளகாதலியின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார். மேலும், கற்பகம் தாக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: போதை ஆசாமியை ஆவேசத்தில் தள்ளிவிட்டு கொலை வழக்கில் சிக்கிய 23 வயது இளைஞன்; பல்லாவரத்தில் அதிர்ச்சி.! i

chennai

பாதிக்கப்பட்ட கற்பகம் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனைக்கும் சென்று தகராறு நடக்கவே, அதிகாரிகள் ஹரியை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் கற்பகம் மருத்துவமனை மாறி செல்லவே, அங்கும் வந்து கற்பகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அச்சமயம், கற்பகத்தின் மூத்த மகன் தந்தைக்கு தொடர்பு கொண்டு கூறவே, ஆத்திரத்தில் கத்தியுடன் வந்த ஹரிகிருஷ்ணனை பிரேம் குமார் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதனால் படுகாயமடைந்த ஹரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக தகவல் அறிந்த பெரவள்ளூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேம்குமார் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். 

இதையும் படிங்க: #Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விவகாரம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.. "திமுக உறுப்பினர் வெற்றி செல்லும்" - அறிவிப்பு.!