மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்சல் உணவில் கையுடன் வந்த சில்வர் கோட்டிங்., பசிக்கு உணவு வாங்கிய சாமானியனுக்கு பேரதிர்ச்சி.. சென்னை மக்களே கவனம்.!
சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர், உணவு சாப்பிட குஸ்கா வாங்கி இருக்கிறார். அவருக்கு அலுமினியம் போன்ற நிறத்துடன் கொண்ட கவரில் வைத்து பார்சல் கட்டி கொடுக்கப்பட்டது. அதனை வாங்கிய நபர், பார்சலை அப்படியே சாப்பிட்டு இருக்கிறார். அச்சமயம், கவரில் இருந்த சில்வர் போன்ற அமைப்பு, கையுடன் வரத்தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ந்துபோனவர், அதனை வீடியோ எடுத்தவாறு சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள வீடியோவில், பார்சல் கவரில் இருந்த நிறம் உணவு, கையுடன் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: பகீர் சம்பவம்.. 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.!! பலாதக்காரம் செய்து படுகொலை.!!
ஹோட்டலில் பார்சல் வாங்குவோர் கவனத்திற்கு.!! இதுல சாப்டா என்ன ஆகுறது? குழந்தைகளுக்கு தயவு செஞ்சு கொடுத்துடாதீங்க.. கையில் ஒட்டும் கவரின் நிறம்... பிரிஞ்சு சாதம் வாங்கி பிரித்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!#Chennai | #Plastic | #BanPlastic | #ParcelFood |… pic.twitter.com/zrZmVXRrg4
— Polimer News (@polimernews) November 18, 2024
உடல் உபாதை ஏற்பட்டால் யார் பொறுப்பு?
மேற்கூறிய விஷயம் குறித்த வீடியோவில், உணவகத்தில் பார்சல் வாங்குவோர் இலைகளில் பார்சலை கட்டச் சொல்லி வாங்கிச் செல்லுங்கள். இதுபோன்ற கவரில் வாங்க வேண்டாம். நான் இதனை சாப்பிட்டுவிட்டேன். விழிப்புணர்வுக்காக பதிவிடுகிறேன். சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுங்கள். இதனால் உடல் உபாதை ஏற்பட்டால் யார் பொறுப்பு? என கேள்வி எழுப்புகிறார்.
ஏற்கனவே சென்னை பெருநகரில் முன்னதாக இட்லி போன்ற உணவுகள் பிளாஸ்டிக் கவரில் ஊற்றப்பட்டு வேகவைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது பிளாஸ்டிக் கவரில் சாதம் வாங்கியவருக்கு பேரதிர்ச்சி கிடைத்து, மக்களுக்கும் பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது.
வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: நடைபாதையில் அமர்ந்தவரை விரட்டித்தள்ளிய மாடு; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!