காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
#Breaking: 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு பகுதியில் நிலவும் காற்றழுத்த சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக பரவலாக பல மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கொளுத்தியெடுத்த வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பித்து குளுகுளு சூழ்நிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.
அதேபோல, ஜூன் 07ம் தேதியான இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #JustIN: 27 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
அதேபோல, அதிகபட்சமாக அரக்கோணத்தில் 11 செமீ மழை பெய்துள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் புறநகர் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: மதியம் 1 மணிவரையில் நாகை, குமரி உட்பட 7 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்.!