மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வெப்பச்சலனம் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னையில் 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், இப்பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.