இன்று தமிழகம்,புதுவையில் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai RMC Update 20 Sep 2022

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 20-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

21ஆம் தேதி, 22ஆம் தேதியை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலைமாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் ,புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். 23ஆம் தேதியை பொறுத்தவரையில் வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

chennai

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரத்தின் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 20ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மன்னார்வளைகுடா, இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.