மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளான கார்; 3 பெண்கள் உடல் நசுங்கி பரிதாப பலி.!
திருச்சிக்கு சென்றுகொண்டிருந்த 4 பெண்கள் பயணம் செய்த கார் விபத்திற்குள்ளான நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் வசித்து வருபவர் உசேன். இவரின் மனைவி ஷமீம் (வயது 50). தம்பதியின் மகன் அம்ரீன் (வயது 22). உறவினரின் மகன் சுபேதா (வயது 21), நசீம். இவர்கள் அனைவரும் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். காரை இராயப்பேட்டையை சேர்ந்த ஏஜாஸ் இயக்கியுள்ளார்.
இன்று காலை 2 மணியளவில் உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் இரயில்வே பாலம் அருகே சென்ற கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஷமீம், அமீரின், சுபேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
கார் ஓட்டுநர் ஏஜாஸ், நசீம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.