ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
விடுதி அறையில் அரசு மருத்துவர் செய்த பரபரப்பு காரியம்.. பதறிப்போன ஊழியர்கள்.!
கணவன் மனைவி குடும்ப பிரச்சினையால் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் மகேஸ்வரன். இவர் நேற்று மாலை நேரத்தில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்ற நிலையில், திடீரென வீட்டிற்கு செல்லாமல் ஆர்.கே சாலையில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதியில் இறங்கி, காரை மட்டும் ஓட்டுனருடன் அனுப்பி வைத்துள்ளார்.
விடுதியில் அறை எடுத்து தங்கிய மகேஸ்வரன், காலையில் நீண்ட நேரமாக வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் அறையின் கதவை மாற்று சாவியை பயன்படுத்தி திறந்த பார்த்துள்ளனர். இதன்போது, மகேஸ்வரன் சடலமாக இருந்துள்ளார்.
அவரது உடல் அருகே ஊசி போன்றவையும் இருந்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மகேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அரசு மருத்துவர் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டாரா? வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.