திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: கழுத்தில் சிக்கிய கேபிள்.. பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய இளைஞர்..!
சென்னையில் உள்ள ராயபுரம், கல்மண்டபம் சாலையில் அசோக் என்ற நபர் வேலைக்கு சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருந்த கேபிள் ஒன்று, இவருக்கு முன்பு சென்ற மாநகர அரசுப்பேருந்தில் சிக்கி இருக்கிறது.
மாநகர பேருந்தின் பின்புறம் சிக்கிய கேபிள், பக்கவாட்டில் சென்ற அசோக்கின் கழுத்தில் சிக்கி இருக்கிறது.
ஓட்டுனரின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய இளைஞர்:
இதனால் நிலைதடுமாறியவர் கீழே சாதுர்யமாக குதித்து இருக்கிறார். மாநகர பேருந்து ஓட்டுனரும் சுதாரிப்புடன் செயல்பட்டு வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனம் மாநகர அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் சிறு காயமடைந்த அசோக்கை முதலுதவி சிகிச்சைக்காக காவல் துறையினரால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.