53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மாணவர்கள் வாட்சப் குழுவில் ஆ., வீடியோ பகிர்ந்த ஆசிரியர்.. அதிர்ந்துபோன மாணவர்கள்..!!
பள்ளி மாணவர்கள் வாட்சப் குழுவில் ஆபாச படம் பகிர்ந்த ஆசிரியரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள திருமங்கலத்தில், தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மதிவாணன். இவர் மாணவர்களுக்கு வாட்சப் குழு மூலமாக, இணையவழி வகுப்பு எடுத்து வந்துள்ளார். மேலும், அதன் வாயிலாக பாடம் குறித்த தகவலையும் பரிமாறி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் மாணவர்கள் அடங்கிய வாட்சப் குழுவில் நேற்று ஆபாச விடியோவை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு தகவலை தெரியப்படுத்தி இருக்கின்றனர்.
இதனையடுத்து, விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட தனியார் பள்ளி நிர்வாகம், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட திருமங்கலம் காவல் துறையினர், ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.