பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
கையில் சிகிரெட், கட்டையுடன் மாமூல் கேட்டு அடாவடி; நூதன பிச்சையெடுத்த ரௌடியின் பகீர் மிரட்டல்.!
சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியில், தனியாருக்கு சுத்தமான சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற ரௌடி விக்கி என்பவர் சென்றுள்ளார்.
அங்கு சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் இருந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான விக்கி, கையில் கட்டை மற்றும் சிகிரெட்டுடன் அங்கு இருந்தார்.
தீபாவளிக்கு வந்தா 5 ஆயிரம் தரணுமாம்
கடையின் உரிமையாளரை பார்த்து மாமூல் வசூலித்தவர், தீபாவளிக்கு தான் வருவேன் என்றும், வந்தால் ரூ.5 ஆயிரம் தந்து கவனிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்கள் சண்டை; பரபரப்பான சைதாப்பேட்டை நீதிமன்றம்.!
மேலும், ஆபாசமான வார்த்தைகளை பேசி மிரட்டல் விடுத்து, கையில் இருந்த கட்டையை காண்பித்து கடையை அடித்து நொறுக்கிவிடுவதாகவும் அடாவடி செய்துள்ளார்.
காவல்துறை விசாரணை
இந்த சம்பவத்தை அங்கிருந்த கடையின் பணியாளர் ஒருவர் வீடியோ எடுத்து இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலர்களையும் தரக்குறைவாக பேசியது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: திமுக கொடிகட்டிய காரில் அதிவேகம், அலப்பறை.. அபராதம் விதித்து ஆப்படித்த காவல்துறை.!