திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு மருத்துவமனை மருந்து குடோனில் மருந்தாளுனர் தூக்கிட்டு தற்கொலை; சென்னையில் அதிர்ச்சி.. கடிதத்தில் அம்பலமான முடிவு.!
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் மணிகண்டபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜன் (வயது 53). இவரின் மனைவி லாவண்யா. தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ராஜன் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார்.
இவர் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்து விடுவார். நேற்று காலை 9 மணிக்கு வேலைக்கு வந்தவர், மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்கு சென்று காற்றாடிக்கு போடப்பட்டிருந்த கொக்கியில் கயிற்றை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காலை 10:30 மணி அளவில் ஊழியர்கள் மருந்து குடோனுக்கு வருகைதந்தபோது, ராஜன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து எழும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில், எனது முடிவுக்கு நான் தான் காரணம் எனக் கூறி, தனது மனைவி மற்றும் மகளின் செல்போன் நம்பரை எழுதி வைத்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது