அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அரசு வேலை வாங்கித்தருவதாக, அரசு ஊழியரிடமே 14 இலட்சம் நாமம் போட்ட தலைமை செயலக பணியாளர்.!
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பெருமாள் காலனியை சேர்ந்தவர் ராஜ முருகபாபு (வயது 50). இவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலயில், சென்னை கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை ராஜ முருகபாபு அளித்துள்ளார்.
இந்த புகாரில், "எனக்கு நன்கு அறிந்த சேத்துப்பட்டு மங்களபுரத்தை சேர்ந்த நிக்சன் (வயது 53) என்பவர் தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் என்னிடம் தலைமை செயலக அதிகாரிகளை எனக்கு தெரியும். என்னால் அரசு வேலை வாங்கி கொடுக்க முடியும் என்று கூறினார்.
அதனை நம்பி அரசு வேலைக்கு ஆர்வமாக இருந்த எனக்கு தெரிந்த 5 பேரிடம் ரூ.14 இலட்சம் வாங்கி அவரிடம் கொடுத்தேன். அவர் வேலை வாங்கி கொடுக்காமல் கடந்த 2 வருடமாக ஏமாற்றி வருகிறார். அவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, என்னிடம் பணம் கொடுத்தவர்களின் ரூ.14 இலட்சத்தை மீட்டு தர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை செய்து நிக்சனை கைது செய்தனர். தற்போது, கைது செய்யப்பட்ட நிக்சன் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.