மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முட்புதருக்குள் நடந்த தகராறு... தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை..!
சென்னையை அடுத்துள்ள திருவேற்காடு, பெருமாள் அகரம் கிராமத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் முட்புதர்கள் நிறைந்த காலியிடத்தில், வாலிபர் ஒருவர் தலையில் காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவேற்காடு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வாலிபரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திடலாம் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரின் வயது 35 இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். பின்னர், வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான நபர் குறித்து விசாரணை செய்கையில், அவர் பீகார் மாநிலத்தை சார்ந்த சுதிர்குமார் (வயது 35) என்பது உறுதியானது.
சுதிர்குமார் சென்னையில் உள்ள அயனம்பாக்கம், செல்லியம்மன் நகர் பகுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்து, அம்பத்தூரில் உள்ள தனியார் வெல்டிங் கம்பெனியில் பணியாற்றி வருவதும் உறுதியானது. கடந்த வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சுதிர்குமார், அதன் பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.